News December 14, 2025
புதுவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News December 15, 2025
புதுச்சேரி: ரூ.52 லட்சம் இழந்த பெண்

புதுச்சேரி வைத்திகுப்பத்தை சேர்ந்த பெண்ணை, டில்லி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என கூறி மர்ம நபர் ஏமாற்றி உள்ளார். அவர் அந்த பெண்ணின் பெயரில் சட்டவிரோத பணமோசடி நடந்ததாக கூறி, பின்னர் டில்லி போலீஸ் அதிகாரி என அறிமுகமான மற்றொரு நபர் வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கேட்டு ஏமாற்றியுள்ளார். அப்பெண் மொத்தம் ரூ.52 லட்சம் அனுப்பி ஏமாந்துள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
புதுவையில் காவல் நிலைய கட்டிட திறப்பு விழா

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள இலாசுப்பேட்டை காவல் நிலைய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி காவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உடன் இருந்தனர்.
News December 14, 2025
புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


