News September 27, 2025

புதுவை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

image

நெல்லித்தோப்பை சேர்நதவர் துரை இவரது மனைவி ரேகா, சொத்து பிரச்சினையால் துரையை கனகன் ஏரி பகுதியில் அவரது உறவினர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்தநிலையில் ரேகாவிற்கு சொந்தமான கடையை அவரது சித்தி சித்ரா அபகரிக்க முயன்றார். இதனை ரேகா தட்டிகேட்டார், இதில் ஆத்திரம் அடைந்த சித்ரா, அவரது மகள் ரேகாவை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Similar News

News January 1, 2026

புதுச்சேரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

புதுச்சேரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <>https://cx.indianoil.in<<>>
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News January 1, 2026

புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News January 1, 2026

புதுவை: போலி ரசீது மூலம் ரூ.87 லட்சம் கையாடல்?

image

அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், கழிவறை கட்டுமான பணிகளில் ரூ.87 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் 2022-ம் ஆண்டு அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட கழிவறை திட்டத்தில் ரசீதுகள் மூலம் பணத்தை கையாடல் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!