News November 10, 2025
புதுவை: புகைப்படம் அனுப்பினால் ரூ.2000 பரிசு!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் உள்ள அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள்,கழிவுகள் கொட்டப்பட்டு அந்த இடம் மலை போல குப்பைகள் குவிந்து அசுத்தமாய் காட்சியளிக்கிறது. இதுகுறித்து குப்பைகளை கொட்டும் வாகனங்களின் விபரங்களை புகைப்படம் எடுத்து 75981-71674 என்ற எண்ணுக்கு அனுப்பி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2,000 சன்மானம் வழங்கப்படும் என உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
புதுவை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

புதுவை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 10, 2025
புதுச்சேரி 3ஆம் இடம், எதில் தெரியுமா?

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைத்தொடர்பு மனநல திட்டம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 10, 2025
புதுவை: மனைவி கண்டிப்பு-கணவர் தற்கொலை!

முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் பெயிண்டர் மாதவன். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி தட்டி கேட்ட நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மாதவன், அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


