News April 22, 2025
புதுவை: பிரமிப்பூட்டும் அதிசய கோவில்

கோவில் என்றாலே கோபுரமும் கலசமும் இருக்கும் என்பதிலிருந்து முழுமையாக மாறுபட்ட கோவில்தான் புதுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கார்னேஸ்வரர் நடராஜர் கோவில். வழக்கமான கோவில் போல இல்லாமல் பிரமிடு வடிவில் அமைந்துள்ள இக்கோவிலில் சென்று வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். SHARE IT.
Similar News
News August 13, 2025
புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..
News August 13, 2025
புதுவையில் இளம்பெண் தற்கொலை

கிருமாம்பாக்கம், பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபராதி (24). இவருக்கும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சொந்த ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டு, திருமணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமாபாரதி தற்கொலை செய்துகொண்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 13, 2025
புதுவையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி நிகழ்ச்சி

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி – மாநில அளவிலான நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.