News May 9, 2024

புதுவை பல்கலைக்கு 2 வாரம் அவகாசம்

image

புதுவையில் தேசிய கல்விக்கொள்கையை அவசர கதியில் பல்கலைக்கழகமும், கல்வித்துறையும் இணைந்து மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மாணவர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் விசாரணையில் புதுவையில், தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தியது தொடர்பாக அரசு பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

புதுவை: மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

image

புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்று திறனாளர்கள் தினம் விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி, இந்திரா காந்தி விளையாட்டு திடலில், வரும் 23ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

News November 20, 2024

வில்லியனூரில் வேளாண் விவசாயிகள் திருவிழா

image

புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஆத்மா திட்டம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி, காலை 9:00 மணியளவில், வில்லியனுார், கோபாலசாமி நாயக்கர் திருமண மஹாலில் நடக்கிறது. தொடர்ந்து, வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

புதுகை: நவோதயா பள்ளியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நேற்று (19ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி நாள் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.