News January 8, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவைப் பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர விரும்பும் மாணவர்கள் (NTA) நடத்தும் CUET-PG 2026 தேர்விற்கு வருகிற 14/01/2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வருகிற கல்வியாண்டில் (2026-2027) இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு (66%) குறைக்கப்படும் எனப் புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
புதுவை: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News January 9, 2026
புதுச்சேரி: PRTC ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (PRTC) ஊழியர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள நிலுவைத் தொகை மற்றும் முறையான ஊதியம் வழங்கக் கோரி இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்படாததால், பணிக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
News January 9, 2026
புதுச்சேரி காவல்துறையில் 53 பேர் இடமாற்றம்!

புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றியவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பதவி உயர்வு பெற்ற 27 ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


