News November 3, 2025
புதுவை: பயங்கர ஆயுதத்துடன் சுற்றித் திரிவர் கைது

கோட்டைமேடு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதயடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவர் கத்தி போன்ற பயங்கர ஆயுதத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில், அவர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த நுாடிஷ் என தெரியவந்ததையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
புதுச்சேரி: தொழில்நுட்ப வல்லுநர்கள் இடமாற்றம்

புதுச்சேரி, சுகாதாரத்துறை சார்பு செயலாளர் முருகேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் சுகாதாரத் துறையில், பணியாற்றி வரும் மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாகி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தர்மராஜ் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கும், அங்கு பணியாற்றி வந்த சுபா மாகி மருத்துவமனைக்கும் இடமாற்றம். மேலும் ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 3, 2025
புதுச்சேரி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், உதவியாளர், பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி அரசு துறையில் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
News November 3, 2025
புதுச்சேரி: இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையில் நடந்த 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல் முறையாக கோப்பையை வென்று வரலாற்றில், தனது பெயரைப் பொறித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சிறப்பான வெற்றி, நம் நாட்டின் அனைத்து மகளிருக்கும் ஒரு புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாகும்.


