News December 30, 2025
புதுவை: பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தைக்கால் தெரு பின்புறம் உள்ள பொது இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன், சக்திவேல், ராமன், குருபிரசாத், விஜய், திரௌபதி வெள்ளைசாமி, சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 30, 2025
புதுவை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News December 30, 2025
புதுவை: துணை ஜனாதிபதி மாணவர்களுக்கு வேண்டுகோள்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் & பதக்கங்களை வழங்கிய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியபோது, “புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது A+ தகுதி பெற்றுள்ளது. இளைய தலைமுறையினரிடம் போதை பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகாதீர்கள். உங்களது நண்பர்களையும் போதை பக்கத்திற்கு செல்ல விடாதீர்கள்.” என்றார்.
News December 30, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நாளை (டிச.31) இரவு கடற்கரை சாலை மற்றும் நகரின் மையப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுவர். அதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை (டிச.31) மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று சீனியர் எஸ்.பி நித்யா அறிவித்துள்ளார்.


