News September 15, 2025
புதுவை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுவை, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பில், “எதிர்வரும் பருவமழை காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், வெளிப்புறத்தில் பேனர் வைப்பது பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே, அனுமதியில்லாமல் பேனர் வைக்கக்கூடாது அப்படி அனுமதி பெறாமல் வைக்கப்படும் பட்சத்தில் அந்த பேனர் வைத்தவர்கள் மீதும், அதனை பிரிண்ட் செய்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.
Similar News
News September 15, 2025
புதுவை: மத்திய அரசில் இன்ஜினியர் பணி அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 15, 2025
புதுவை: ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆசிரியர்களின் 5 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை என மொத்தம் ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
News September 15, 2025
புதுவை: மூட்டு வலியால் மூதாட்டி தற்கொலை

வில்லியனூர், பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன்-விருத்தாம்பாள் தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விருத்தாம்பாள் கடந்த சில ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.