News December 29, 2025
புதுவை: துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர்

புதுச்சேரி விமான நிலையத்தில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வருகை தந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி வெள்ளி கலசம் வழங்கி மரியாதையுடன் வரவேற்றார். இவருடன் அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரியில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 30, 2025
புதுச்சேரி: செவிலியர் பணிக்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள்

புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில், 226 செவிலியர் பதவியை நிரப்ப உளளது. கடந்த நவம்பர் 6-ந் தேதி வரை 226 பணிக்கு 4,714 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணிக்கு 21 பேர் வீதம் போட்டியிடும் நிலை உள்ளது. தற்போது விண்ணப்பம் சரி பார்க்கும் பணி நடக்கிறது. இதன்பின் இடஒதுக்கீட்டின் படி தற்காலிக தேர்வு பட்டியல் ஜனவரியில் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 30, 2025
புதுச்சேரி: அரசு திட்ட உதவிகள் வழங்கிய துணை ஜனாதிபதி

புதுச்சேரிக்கு வருகை புரிந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி அரசின் சார்பாக கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற பொது வரவேற்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர், பல்வேறு அரசு திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
News December 30, 2025
புதுச்சேரி: தனது வருகையை பதிவு செய்த துணை ஜனாதிபதி

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று வருகை புரிந்தார். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்த துணை ஜனாதிபதி, அங்கிருந்த பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்பு அங்கு உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு தனது வருகையை பதிவு செய்தார்.


