News October 20, 2025
புதுவை: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

புதுச்சேரி மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிலும் விநாயகரை வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க
Similar News
News October 20, 2025
புதுச்சேரி: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேற்று முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது பொன்னாடை போற்றி, பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வின் அரசு அலுவர்கள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.
News October 20, 2025
புதுவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
புதுவை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் பேட்டி

புதுவை சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், சோகோ நிறுவனத்தின் குழு, புதுவைக்கு வந்து ஆய்வு செய்துள்ளது. சமூக பங்களிப்பின் மூலம் பட்டம் படித்த மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளிப்பதற்கு குவாண்டம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி ஆரம்பிக்கப்பட இருக்கிறது’ என தெரிவித்தார்.