News October 18, 2025
புதுவை: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 18, 2025
புதுச்சேரி: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 18, 2025
புதுச்சேரி விடுதலை விழா குறித்து ஆலோசனை

புதுச்சேரி விடுதலை தின விழா வரும் 01.11.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அரசுச் செயலர் முகமது அஹ்சன் அமித் தலைமையில், தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை தின விழாவை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
News October 18, 2025
ஆற்றங்கரையோர மங்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வீடூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளான மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், நோணாங்குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.