News December 27, 2025

புதுவை: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் கலெக்டர் ஆய்வு

image

காரைக்கால், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ரவிபிரகாஷ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 30, 2025

புதுச்சேரி: அரசு திட்ட உதவிகள் வழங்கிய துணை ஜனாதிபதி

image

புதுச்சேரிக்கு வருகை புரிந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி அரசின் சார்பாக கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற பொது வரவேற்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர், பல்வேறு அரசு திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

News December 30, 2025

புதுச்சேரி: தனது வருகையை பதிவு செய்த துணை ஜனாதிபதி

image

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று வருகை புரிந்தார். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்த துணை ஜனாதிபதி, அங்கிருந்த பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்பு அங்கு உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு தனது வருகையை பதிவு செய்தார்.

News December 29, 2025

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் புதுச்சேரியின் ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!