News December 8, 2025
புதுவை: தவெக கூட்டம் – அனுமதி கிடையாது

புதுச்சேரியில், நாளை டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி கொடுத்தனர். இந்த கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக பரப்புரை கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
புதுச்சேரி: ஈஷா சிங்கிற்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜயின் பொதுக்கூட்டம் அமைதியாக நிறைவடைந்தது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் சிறப்பாக காவல் ஏற்பாடுகளை செய்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிற்கு, புதுச்சேரி மாநிலம உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
News December 11, 2025
மகாகவி பாரதியார் பிறந்தநாள் – முதல்வர் மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவர் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News December 11, 2025
புதுவை: போலி மருந்து வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் ராஜா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய விவேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக இருவரும் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


