News January 22, 2026
புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
புதுச்சேரி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 27, 2026
புதுவை மக்களே உஷார்.. ரூ.5.5 கோடி மோசடி!

புதுவை, ரெயின்போ நகரை சேர்ந்த தொழிலதிபரை, வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதனை நம்பி மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக, 5 கோடியே 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்த அவர், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

புதுச்சேரி குருமாம்பேட் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் திலாசுப்பேட்டை, கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், தட்டாஞ்சாவடி, கொட்டுப் பாளையம், புதுப்பேட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


