News November 4, 2025
புதுவை: ஜிப்மர் மருத்துவமனை இயங்காது

புதுவை ஜிப்மர் நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் விடுமுறை தினமான குருநானக் ஜெயந்தி முன்னிட்டு, நாளை 5ம் தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே வெளிப்புற சிகிச்சைக்கு வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். மற்றபடி அவசர சிகிச்சை பிரிவு அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
புதுவை: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஆணையர் ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்புவிற்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரத் துறை கவனிப்பார். அரசு செயலர் முகமது ஹசன் அபித், உயர்கல்வி துறையை கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.
News November 4, 2025
புதுவையில் இன்று மின் தடை அறிவிப்பு

புதுவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மரப்பாலம் துணை மின் நிலையம், கோர்க்காடு துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் இன்று (நவ.04) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 வரை தில்லையாடி, வித்யாலயா நகர், தியாகி சுப்புராயன் நகர், இந்திரா நகர் மற்றும் இன்னும் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இது
(டிசம்பர் 4) வரை வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பார்கள். வாக்காளர்கள், பிறந்தநாள் ஆவணம், தொலைபேசி எண், தற்போதைய புகைப்படம் வைத்துக்கொள்ள வேண்டும். Form 6, Form 8 ஆகியவை தொகுதி மாறி உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.


