News October 14, 2025

புதுவை: சொத்து வரி செலுத்தாத மனைகள் ஜப்தி

image

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் உள்ள காலி மனைக்கான சொத்து வரியை 15 நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 பிரிவு 180ன் படி சொத்து வரி செலுத்தாதோர் விற்கிரயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலுள்ள அசையும் சொத்தின் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

புதுச்சேரி: அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

image

புதுச்சேரியில் விளம்பரத்துறை இயக்குநர் முனிசாமிக்கு கூடுதலாக எழுதுபொருள் அச்சகத்துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சுபாசுக்கு நகராட்சி ஆணையராகவும்; குடிமைப்பொருள் துணை இயக்குநர் சச்சிதானந்துக்கு காரைக்கால் கோயில் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

News October 14, 2025

புதுவை: பட்டப்பகலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

image

தவளக்குப்பம், ஆனந்தா நகரைச் சேர்ந்த மூதாட்டி எழிலரசி. இவர் நேற்று மதியம் அபிஷேகப்பாக்கம் சாலை வழியாக கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென எழிலரசி கழுத்தில் இருந்த, நான்கரை சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இச்சம்பவத்தில் மூதாட்டி எழிலரசி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து தற்போது தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 14, 2025

புதுச்சேரி: பெரிய மார்க்கெட் கட்டடங்கள் இடிப்பு

image

புதுச்சேரி மையப் பகுதியான நேரு வீதி – காந்தி வீதி சந்திப்பில் ‘குபேர் அங்காடி’ என்ற பெரிய மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 572 நிரந்தரக் கடைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிகாசு கடைகள் உள்ளன. இந்த நிலையில், நகராட்சி மூலம் முதற்கட்டமாக பெரிய மார்க்கெட்டில் உள்ள இறைச்சி விற்பனை பகுதிகளில் அமைந்திருக்கும் பழுதடைந்த கட்டடங்களின் 51 கடைகள் இடித்து அகற்றும் பணி நேற்று (அக்.13) துவங்கப்பட்டது.

error: Content is protected !!