News November 17, 2025
புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

புதுச்சேரி: அரசு கல்வி இயக்ககம் நிதி வழங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்காக, பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.3,14,70,000 முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.