News December 13, 2025

புதுவை சமூக செயல்பாட்டாளருக்கு புதுடெல்லியில் விருது

image

புதுடில்லியில் பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில், இன்று(12.12.2025) புரட்சியாளர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அதில் புதுவை மாநிலத்தின் ஏப்ரல்14 இயக்கத்தின் தலைவர் நா.நித்தியானந்தம் அவ்விருதினை பெற்றார். இவருக்கு புதுவையை சார்ந்த பல முற்போக்கு இயக்கங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “வரும் 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி டிஜிபி சாலிணி சிங் உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை 13ம் தேதி சனிக்கிழமை காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முதல் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

News December 12, 2025

புதுச்சேரி: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!