News October 14, 2025
புதுவை: குடிநீர் வினியோகம் நிறுத்தம்

புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் (அக் 15) புதன்கிழமை மதியம் 12 மணி முதல், 2 மணிவரை ராகவேந்திரா நகர் பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 13, 2025
புதுச்சேரி: விவசாயிகள் குறைதீர்பு கூட்டம் அறிவிப்பு!

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை சார்பில் (14.10.2025) காலை 11 மணியளவில் புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் முன்னிலையில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
News October 13, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News October 13, 2025
புதுச்சேரி: அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்

புதுச்சேரிக்கு இன்று வருகை புரிந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ.436 கோடி மதிப்பில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 4 கி.மீ. தூரத்தில் உயர்மட்ட வழித்தடம், ரூ.25 கோடி மதிப்பில் 14 கி.மீ. நீளமுள்ள ECR சாலை மேம்படுத்தல் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1,588 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதுச்சேரி-பூண்டிாங்குப்பம 4 வழி சாலையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.