News September 2, 2025

புதுவை: காரைக்காலுக்கு புதிய சப்-கலெக்டர்

image

காரைக்கால் மாவட்ட புதிய சப்-கலெக்டராக பூஜா ஐ.ஏ.எஸ்.-யை புதுச்சேரி அரசு கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி நியமனம் செய்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்.01) காலை காரைக்கால் மாவட்ட சப்-கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து சப்-கலெக்டரை, காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் குலசேகரன், மாவட்ட தேர்தல் அலுவலக கண்காணிப்பாளர் பக்கிரிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News September 2, 2025

புதுவை: ரூ.80,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தேசிய அளவில் வங்கிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கு 21.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

அரசு காலி பணியிட விபரங்களை சமர்பிக்க உத்தரவு

image

குரூப்-சி, பி, பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்ய புதுவை தேர்வு ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர், இன்று (செப்.01) தெரிவித்துள்ளார். மேலும், துறை தலைவர்கள், தங்கள் துறையின் காலியிடங்கள், பதவிகளின் பெயர் உட்பட அனைத்து விபரங்கள், முன்மொழிவுகளையும் வரும் 15ந் தேதிக்குள் தேர்வு ஆணையத்திடம் சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

News September 1, 2025

புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளம்.. ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பதிவிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்.29ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!