News March 18, 2024
புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News February 12, 2026
புதுச்சேரி: அரசு பணியாளர் தலைவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை முற்றுகையிட முயன்ற அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் சரவணன் மீது, உருளையன்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சரவணன் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 12, 2026
புதுச்சேரி: டிகிரி போதும் – வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 12, 2026
புதுவை: அரசு பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

புதுவை, தேர்வு ஆணையம் அரசு பணிகளுக்கு தேர்வு அட்டவணை நேற்று வெளியிட்டுள்ளது. ஜூனியர் நூலக உதவியாளர், தொகுப்பு (கேலரி) உதவியாளர்களுக்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடக்கிறது. எல்.டி.சி., ஓவியர் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு முதல் தாள் வரும் 31-ம் தேதி காலையும், 2-ம் தாள் மதியமும் நடக்கிறது. ஓவியருக்கான திறன் தேர்வு ஜூன் 7-ம் தேதி காலை நடக்க உள்ளது.


