News February 21, 2025
புதுவை: காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு அழைப்பு

புதுவை சுகாதாரத்துறையில் சமீபத்தில் நர்சிங் அதிகாரி (நர்சுகள்) பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்த தேர்வில் வெற்றிபெற்ற சிலர் பணியில் சேரவில்லை. இதைத்தொடர்ந்து அந்த காலியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
Similar News
News February 21, 2025
புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்க ஒப்புதல்

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதம் எழுதி கோரிக்கை வைத்தார் அந்நிலையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கும் மற்றும் பாண்டியிலிருந்து கடலூர் வரை உள்ள 20கிமீ ரோட்டை அகலப்படுத்தவதற்கும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
News February 21, 2025
பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை கைது

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிட்டதாக, பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை என்பவரை புதுச்சேரி போலீசார் இன்று அதிகாலை சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 21, 2025
பொருளதார கணக்கெடுப்பை கண்காணிக்க குழு அமைப்பு

புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் ரத்தினகோஸ் கிஷோர் சாரி நேற்று வெளியிட்டுள்ள சரி குறிப்பில் எட்டாவது பொருளாதாரப் புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதற்கு புதுச்சேரி அரசு தயாராகி வருகிறது இந்த கணக்கெடுப்பின்போது ஏற்படும் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை தீர்க்க கண்காணிக்கவும் தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்