News December 31, 2025

புதுவை: காதலுக்கு எதிர்ப்பு-வாலிபர் தற்கொலை

image

பங்கூர், புதுநகரைச் சேர்ந்தவர் கார்த்தி அரியூரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததனால் மனமுடைந்த கார்த்தி நேற்று வீட்டில் அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தாய் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 14, 2026

“IT, AI-ல் புதுவையை மையமாக வேண்டும்” – அமித்ஷா!

image

காரைக்கால் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளோம். புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வோம். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம். ஐடி, ஏஐ புரட்சியில் புதுவையை மையமாக வேண்டும்.” என தெரிவித்துள்ளார். இது குறித்த உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்.

News February 14, 2026

புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமித்ஷா!

image

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று வருகைதந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.” என வருத்தம் தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பாக “புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையவேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.

News February 14, 2026

புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் புதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,44,211 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00,477, மூன்றாம் பாலினத்தவர் 139 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட 56,882 பேர்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!