News November 19, 2025

புதுவை காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்

image

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆய்வு கூட்டம், இன்று புதுடில்லி இந்திரா பவனில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டசபை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.

Similar News

News November 19, 2025

புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

image

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 19, 2025

புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

image

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

News November 19, 2025

புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

image

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!