News December 8, 2025
புதுவை: கல்லூரி மாணவி தற்கொலை

வில்லியனுார் அருகே கனுவாப்பேடையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா(19) B.Sc., படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலையும் செய்துள்ளார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரூபிகா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர்

காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியான கருவடிகுப்பத்தில், U டிரைனேஜ் வடிவுக்கால் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில், அரசு நிகழ்ச்சியாக அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அஇஅதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 8, 2025
புதுச்சேரி: மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

புதுச்சேரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி. பாட்க்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களால், இன்று 8ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் நடக்க உள்ளது.
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


