News March 26, 2025

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்

image

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தி வருகிறது. மேலும் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Similar News

News August 9, 2025

முதல்வர் ரங்கசாமி பேட்டி

image

சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். இதில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.4750 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடைபெறவுள்ள பணிகளுக்கு இரண்டு தவணையில் இந்த நிதி புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும். 50 ஆண்டுகள் கழித்து இந்த கடனை திருப்பி செலுத்தப்படும். மிக குறைந்த 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டியில் இந்த நிதியுதவி கிடைக்கிறது என்றார்.

News August 9, 2025

புதுவை: ரூ.1,42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

புதுவை மக்களே மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

image

புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் வழங்கப்படும் மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள நில உச்சவரம்பு பொது விவசாயிகளுக்கு 1% ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகவும். அட்டவணை இன விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் இருந்து ½ஏக்கராகவும் குறைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் உழவர் உதவியகங்கள் அல்லது https://agri.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!