News February 25, 2026

புதுவை: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலத்த காயம்

image

தவளக்குப்பம் அருகிலுள்ள நல்லவாடு வடக்குத்தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) தலைமையில் 5 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக எழுந்த பெரிய அலையில் படகு கவிழ்ந்து, அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். இதில் சதீஷ் என்பவர் பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் மற்றும் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 25, 2026

புதுச்சேரி எஸ்.ஐ எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

image

புதுச்சேரி காவல்துறையில் எஸ்.ஐ எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் தினகர் என்பவர் முதலிடத்தையும், ஹரிஹரன் என்பவர் 2-ம் இடத்தையும், ஹரிகிருஷ்ணா என்பவர் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் மோனிகா என்பவர் முதலிடத்தையும், வனிதா லட்சுமி என்பவர் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த முடிவுகளை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்டார்.

News February 25, 2026

உழவர்கரை பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

image

புதுவை விமான நிலைய மைதானத்தில் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இது தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவைக்கு மார்ச் 1-ம் தேதி பிரதமர் வருகையையொட்டி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள், பலூன்கள் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!