News December 19, 2024
புதுவை கடலில் இறங்க தடை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை மணலில் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர். உள்ளூர் மக்களும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு வந்து கடல் அழகை ரசித்து நிற்க அனுமதிக்கும் போலீசார், அவர்கள் கடற்கரையில் இறங்க முயற்சிக்கும்போது, வானிலை எச்சரிக்கையை கூறி அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றினர்.
Similar News
News September 12, 2025
புதுவை: ஓட்டல் கேஷியர் மயங்கி விழுந்து பலி

புதுச்சேரி, சுபையா சாலையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கேஷியராக பணி செய்து வந்தார். விடுமுறைக்கு புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தார் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
News September 12, 2025
புதுவை இளைஞர்களே RBI வங்கியில் வேலை

புதுவை மக்களே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 12, 2025
புதுச்சேரி: சட்டக் கல்லூரி சோ்க்கை கலந்தாய்வு

புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள டாக்டா் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இதற்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் இக்கலந்தாய்வு நடைபெறுகிறது என்று இக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.