News December 30, 2025
புதுவை எழுத்தர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு

புதுச்சேரி அரசு துறைகளில் மேல்நிலை எழுத்தர்கள் 4 பேருக்கு அசிஸ்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்கால் அமுதாராணி மின்துறை அலுவலகத்துக்கும், வனஜா துணை ஆய்வாளர் (பள்ளி) அலுவலகத்துக்கும், புதுச்சேரி சிலம்பரசி பள்ளிக்கல்வி துறைக்கும், புதுச்சேரி பொற்கொடி புதுவை மின்துறைக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை
புதுவை பணியாளர் சார்பு செயலாளர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
புதுவை: ஆபரேஷன் ‘த்ரிஷூல்’ – 4 பேர் கைது

சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துவதற்காக, புதுச்சேரி யூனியன் பிரதேச போலீசார் நேற்று ஆபரேஷன் ‘த்ரிஷூல்’ நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த நடந்த இந்த நடவடிக்கையானது புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது . ‘த்ரிஷூல்’ ஆபரேஷன் முடிவில் மொத்தம் 185 குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் ஆயுதம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 31, 2025
புதுவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
புதுவை: லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் காஞ்சனூரைச் சேர்ந்த கொத்தனார் சேட்டு(50). இவர் வில்லியனூருக்கு கலைவாணன்(20) என்பவர் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சேட்டு வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


