News March 24, 2025
புதுவை: எதிர்க்கட்சித் தலைவர் குண்டுகட்டாக வெளியேற்றம்

பொதுப்பணித்துறையில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா குண்டுகட்டாக அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
Similar News
News October 17, 2025
புதுச்சேரி: ரூ.29,000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 17, 2025
புதுவை: காவல்துறை மோப்ப நாய் உயிரிழப்பு!

புதுச்சேரியின் காவல்துறையில் நடைபெற்ற பல்வேறு கிரிமினல் மற்றும் கொலை குற்றங்களை கண்டறிய பல வருடங்களாக திறம்பட செயல்பட்டு, ஓய்வு பெற்ற
காவல்துறையின் அர்ஜுன் என்ற பெயருடைய மோப்ப நாய் திடீரென்று உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உரிய மரியாதையுடன் மோப்ப நாய் அர்ஜூனை அடக்கம் செய்தனர்.
News October 17, 2025
புதுவை: 66 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா!

புதுவை கொம்பாக்கம் – வில்லியனூர் மெயின் ரோடு, சிமெண்ட் களம், ஒட்டாம்பாளையம் மற்றும் செட்டிக்களம் சாலைகளில் வசிக்கும் 66 ஏழை குடும்பங்களுக்கு அரசின் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று (17-10-25) சட்டசபை வளாகத்தில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டாவை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.