News August 18, 2025
புதுவை: உங்கள் Phone காணாமல் போனா No Tension!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
Similar News
News August 20, 2025
புதுச்சேரியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, 1 ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆக.22-ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0413- 2331408/2220105 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News August 20, 2025
புதுவை: இன்று மின் தடை செய்யப்படும் இடங்கள்

புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புதிய மின் பாதை, நகர மின் பாதைகளில் இன்று (ஆக.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9:30 மணி முதல் மதியம் 1:45 மணி வரை சுழற்சி முறையிலும், அதேபோல, வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முத்தியால்பேட்டை மின் பாதையில் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்புகள் தொடக்கம்

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாக், டயாலிசிஸ், ஆக்சிடெனட் கேர் ஆகிய 3 படிப்புகளுக்கு
சுகாதாரத்துறை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் அரசு ஒதுக்கீடு 24, சுயநிதி ஒதுக்கீடு 6 என மொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், சேர சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.