News November 1, 2025

புதுவை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 1, 2025

புதுவை: மது போதையில் ரகளை செய்த இளைஞர் கைது

image

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பொது மக்களிடம் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று
ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் லாஸ்பேட்டை சதீஷ் குமார்( 27), என்பது தெரிய வந்தது. பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News November 1, 2025

புதுவை: மருத்துவ படிப்பில் கூடுதலாக இடங்கள்

image

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்க 56 இடங்கள் உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதனை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக 16 இடங்களை நிரப்ப மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனால் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை இடங்கள் 72 ஆக உயர்ந்துள்ளது.

News November 1, 2025

புதுவை: விடுதலைநாள் விழா – தேசிய கொடி ஏற்றிய முதல்வர்

image

புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (நவ.1) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். இவ்விழாவில் சபாநாயகர், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!