News August 21, 2025
புதுவை: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை (ஆக.22) நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதய சிகிச்சை, சிறுநீரகவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் வருகை புரிந்து சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்க உள்ளனர் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW
Similar News
News August 21, 2025
புதுச்சேரி துணை வட்டாட்சியர் தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பதவிக்கு, போட்டித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (31/08/25) அன்று நடைபெற உள்ளது. போட்டிக்கான நுழைவு சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், போட்டித் தேர்வு புதுச்சேரி காரைக்கால், மாஹே மற்றும் யானாம் பகுதியில் நடைபெறும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
News August 21, 2025
புதுவை:இந்தியன் வங்கியில் வேலை-APPLY NOW!

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <
News August 21, 2025
புதுச்சேரி – விழுப்புரம் ரயில் 7 நாள் முழுமையாக ரத்து

தென்னகர ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறியதாவது:
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் மெமு ரயில் (வ.எண் 66063) புதுவையிலிருந்து
விழுப்புரத்துக்கு இயக்கப்படும். 24, 25, 26, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் மெமு ரயில் (வ.எண் 66064) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.