News September 23, 2025

புதுவை: இறைச்சி கடைகளை மூட உத்தரவு

image

புதுவை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தியில் காந்தி ஜெயந்தி விழா அடுத்த மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு அங்காடிகளில் ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களும், மீன் கடைகளும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

image

புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஜெகன்(40) பெரியபாளையத்து
அம்மன் கோவில் கொலு விழாவுக்கு கோபுரத்தின் மீது ஏறி ஸ்பீக்கர்செட் கட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருந்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2025

புதுச்சேரி: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

image

புதுச்சேரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

புதுவை: தங்கும் விடுதியில் தற்கொலை!

image

புதுவை சண்முகபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (33), இவர் வெளியூர் சென்று வீடு திரும்பவில்லை என்று அவர் தங்கை மஞ்சு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தன்று மஞ்சுவிற்கு போன் செய்த மணிகண்டன் அம்மாவை பார்த்துகொள் என கூறியுள்ளார். இந்தநிலையில் அவர் சாரம் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உருளையன் பேட்டை போலீசார் மணிகண்டன் தற்கொலை காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!