News March 30, 2024
புதுவை: இறுதி வேட்பாளர் பட்டியல்

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் 19 சுயேட்சைகள் என 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வேட்பாளர் பட்டியலை புதுச்சேரி தேர்தல் நடந்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
“IT, AI-ல் புதுவையை மையமாக வேண்டும்” – அமித்ஷா!

காரைக்கால் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளோம். புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வோம். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம். ஐடி, ஏஐ புரட்சியில் புதுவையை மையமாக வேண்டும்.” என தெரிவித்துள்ளார். இது குறித்த உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்.
News February 14, 2026
புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமித்ஷா!

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று வருகைதந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.” என வருத்தம் தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பாக “புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையவேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.
News February 14, 2026
புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் புதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,44,211 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00,477, மூன்றாம் பாலினத்தவர் 139 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட 56,882 பேர்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


