News August 20, 2025

புதுவை: இன்று மின் தடை செய்யப்படும் இடங்கள்

image

புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புதிய மின் பாதை, நகர மின் பாதைகளில் இன்று (ஆக.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9:30 மணி முதல் மதியம் 1:45 மணி வரை சுழற்சி முறையிலும், அதேபோல, வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முத்தியால்பேட்டை மின் பாதையில் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2026

புதுவை: ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

image

புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள சரவணா கிரீன் சிட்டியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிகிச்சைக்காக மதுரை சென்றுள்ளார். இந்த நேரத்தில், வீட்டின் பின்புற இரும்பு வாசலை உடைத்து, அலமாரியில் இருந்த இரண்டரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 13, 2026

புதுச்சேரி: ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

image

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் பிப்.14-ம் தேதி அன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

News February 13, 2026

காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

image

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!