News December 24, 2025
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
புதுவை: இனி அலைச்சல் வேண்டாம்!

புதுவை மற்றும் காரைக்கால் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News December 26, 2025
புதுச்சேரி வேளாண் துறை மூலமாக சிறப்புப் பயிற்சி

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலமாக ஆத்மா திட்டத்தின் வாயிலாக நெல்லில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சமீபத்திய உத்திகள் குறித்த பயிற்சி மதகடிப்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் துணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, வேளாண் அலுவலர் நடராஜன் விவசாயிகளை வரவேற்று, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கினார்.
News December 26, 2025
புதுச்சேரியில் கேரளா மாணவர் கைது!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது அவை உண்மையற்றவை என்பது உறுதியானதாகத் தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி போலீசார், அந்த மாணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


