News November 19, 2025
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
Similar News
News November 20, 2025
புதுகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

புதுகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
புதுவை: இனி மதுக்கடை உரிமம் ரத்து!

புதுவை கலால்துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி, “புதுவையில் மதுபானக்கடைகளுக்கு சென்று வர ஒரு நுழைவாயில் மட்டும் வைத்திருக்க வேண்டும். மதுக்கடை இடத்தை இடமாற்றம் அல்லது விற்பனை செய்யவேண்டு என்றால் கலால்துறையின் முன் அனுமதி பெறவேண்டும். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மதுக்கடையின் உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
புதுச்சேரி & காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…


