News April 15, 2025
புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் அலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த வகையில் நேற்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 15, 2026
புதுச்சேரி: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 15, 2026
புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News February 15, 2026
புதுச்சேரியில் வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் PTDC இணைந்து ‘CISF வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி 2026’ இன்று (பிப்.15) காலை 6.00 மணிக்கு காந்தி திடலில் தொடங்கியது. இந்தியாவின் நீண்ட கடற்கரைப் பாதையை ஒட்டிச் செல்லும் இந்த பேரணி, கடலோரப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமை என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது.


