News April 7, 2025
புதுவை: ஆன்லைனில் ரூ.49,000 இழந்த நபர்

புதுச்சேரி, சின்னக்கடையை சேர்ந்தவர் வசந்த ராஜன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி வசந்தராஜன் ரூ.49,000 முதலீடு செய்து ஏமாந்ததுள்ளார். பின் அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுபோன்ற போலி அழைப்புகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளனர்.
Similar News
News April 11, 2025
புதுவை இஷ்ரம் வலைத்தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

புதுச்சேரியில் பணிபுரியும் அமைப்புச்சார் தொழிலாளர்கள் இஷ்ரம் ‘register.eshram.gov.in’ வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக,அரசின் தொழிலாளர் துறை சிறப்பு முகாம்களை அமைத்து இஷ்ரம் பதிவை இலவசமாக செய்து வருகிறது,அனைத்து பொது சேவை மையங்கள், அமைப்புச்சார் தொழிலாளர் நலச் சங்கங்கள் பல்வேறு இடங்களில் வரும் 17ஆம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
News April 11, 2025
புதுச்சேரியில் மீன் பிடிக்க தடை

புதுவை மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடல்சார் மீன்வளங்களை நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்தும் வகையில் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி என 61 நாட்களுக்கு புதுவை மற்றும் காரைக்காலில் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிப்பதாக அறிவிக்கப்படுகிறது.
News April 11, 2025
புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளி காவலர் பலி

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பிரசாந்த் என்பவர் ஹோம் கார்ட் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று இரவு உரிய அனுமதியின்றி காவலர் பள்ளியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி – விழுப்புரம் சாலை எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.