News December 18, 2025
புதுவை: ஆதிதிராவிடர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம்

புதுவை சட்டபேரவையில் இன்று (டிச.18) முதல்வர் ரெங்கசாமி தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுங்காடு – கோட்டுச்சேரி MLA சந்திர பிரியங்கா கலந்து கொண்டு, அவரது தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலவி வரும் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை எடுத்துரைத்தார். மேலும், இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
Similar News
News December 23, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

காரைக்காலில் சமீப காலமாக வாட்ஸ்ஆப், டெலிகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் “2025 அரசு பொதுமக்கள் உதவித்திட்டம்”, “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.30,000 உதவித்தொகை” என பரப்பப்படும் செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகள் முற்றிலும் போலியானவையாகும். இத்தகைய போலி இணையதள இணைப்புகளை கிளிக் செய்தால், உங்களது வங்கிக் கணக்கு விபரங்கள் திருடும் அபாயம் உள்ளது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News December 23, 2025
புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை (CBI) மற்றும் என்ஐஏ (NIA) அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.