News July 10, 2025
புதுவை: ஆசிரியர் பட்டய படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News July 10, 2025
புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்கள்

➡️திருபுவனை – பா. அங்காளன் (9655211111)
➡️உப்பளம் – அன்னிபால் கென்னடி (9488483330)
➡️ இந்திரா நகர் – ஏ.கே.டி. ஆறுமுகம் (9443241454)
➡️அரியாங்குப்பம் – பாஸ்கர் தட்சிணாமூர்த்தி (9443468258)\
➡️நெடுங்காடு – சந்திரபிரியங்கா (9443629191)
➡️ காமராஜ் நகர் – ஜான்குமார் (9655680961) இந்த தகவலை மறக்காம உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 10, 2025
புதுவை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.
News July 10, 2025
ஆட்டோ ஓட்டுநரை கட்டையால் தாக்கிய பெண்கள்

ராசு உடையார் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாராயணன் (42). இவரது மனைவி வள்ளி மணக்குள விநாயகர் கோயில் அருகே பூக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், வள்ளி கடை அருகே அமுதா என்பவர் புதிதாக பூக்கடை வைத்துள்ளார். இதனால் அமுதாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமுதாவும், அவருக்கு ஆதரவாக சந்தியா என்பவரும் மரக்கட்டையால் நாராயணனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.