News September 9, 2025

புதுவை: அளவுக்கு அதிகமான குடியால் ஓட்டுநர் பலி

image

புதுவை பொறையூர்பேட் அருள்ராஜ் (34) டிரைவர் குடிபழக்கம் உள்ளவர். இவர் வயிற்று வலிக்காக அடிக்கடி தானே மாத்திரை வாங்கி சாப்பிடுவார் சம்பவத்தன்று குடித்துவிட்டு படுத்தவருக்கு திடீரென்று வயிற்று வலிஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

புதுச்சேரி: வெளியானது கலந்தாய்வு பட்டியல்

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்டாக் இணையதளத்தில் https://centacpuducherry.in பி.டெக் 2ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்க வேண்டும். இடம் கிடைத்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் அசல் சான்றிதழுடன் சேர வேண்டும். SHARE IT

News September 9, 2025

புதுச்சேரி: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

image

புதுவை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து Register பண்ணுங்க! மாதம் ரூ.22,000 முதல் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்க ரோடியர் மில் ரயில்வே கேட் நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது. இதனால் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் முதல் ஆலை வீதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும். SHARE IT

error: Content is protected !!