News April 25, 2024
புதுவை: அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி

முத்தியால்பேட்டையை சேர்ந்த ஹேமசந்திரன் என்பவர் டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அறுவை சிகிச்சையின் போது அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Similar News
News January 1, 2026
புதுச்சேரி முதல்வருக்கு முன்னால் சபாநாயகர் வாழ்த்து

2026 புத்தாண்டை வரவேற்கும் வகையில், சப்தகிரி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான சப்தகிரி V.P. சிவக்கொழுந்து, ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் V.P.S.ரமேஷ்குமார், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை போற்றி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News January 1, 2026
புதுச்சேரி: லாரி டயரில் சிக்கிய மாணவி

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கவி நர்சிங் படித்து வருகிறார். இவர் தனது தோழி தீபிகா என்பவரை அழைத்துக் கொண்டு உறவினர் சரண் என்பருடன் காரைக்கால் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று வந்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி உள்ளனர். அப்பொழுது மதகடி அருகே சென்ற பொழுது, பின்புறம் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், சங்கவி லாரியின் டயரில் சிக்கி பலியானார்.
News January 1, 2026
புதுச்சேரி: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

புதுச்சேரியில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. ரெயின்போ நகர் மூவர் கொலை
2. பாஜக நிர்வாகி உமாசங்கர் கொலை
3. மதுபான விடுதியில் இளைஞர் அடித்துக் கொலை
4. லாஸ்பேட்டை காவல் நிலையம் அருகே கொலை
5. ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி
6. ரேஷன் கார்டு தாரர்களுக்கு கூடுதல் கோதுமை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.


