News November 16, 2025
புதுவை: அரசு பணி விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பட்டப்படிப்பு, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் அதற்கு இணையான கல்வி தகுதி அடிப்படையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் காலியிடங்கள் தொடர்பான விவரங்களை (நவ.18) முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Similar News
News November 16, 2025
வில்லியனூர் அதிக குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி சாவு

புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் சதீஷ்( 38)
பெயிண்டர். இவர் தந்தை சேகர் (64)கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தால் இவருக்கு ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய்
இருந்தது. இவர் சில நாட்களாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வராமல்
இருந்துள்ளார். இதனிடையே
தனியார் வணிக வளாகத்தில் சேகர்
இறந்து கிடப்பதாக சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
லாஸ்பேட் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்தவர் கைது

புதுவை லாஸ்ட்பேட் கருவடிக்குப்பம் பகுதியில் மர்மநபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பது தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் செய்தனர்.
News November 16, 2025
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவ.17(திங்கள்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. இந்த மாத குறைதீர்ப்பு முகாமுக்கான புதிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


