News October 15, 2025
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அம் லுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
புதுவை: மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் தற்கொலை

அரியாங்குப்பம் உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் டிரைவர் சிவபாண்டியன் (52). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் இவர் வானூர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் சிவபாண்டியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 15, 2025
புதுவை: போலீசாரிக்கு 93 புதிய வாகனங்கள் வழங்கல்

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சார்பில் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக போட்டித் தேர்வுகளுக்கான காவலர் கற்றல் மையம் நேற்று தொடங்கப்பட்டது. மேலும் சுமார் ரூ.8.50 கோடி மதிப்பில் 93 புதிய வாகனங்கள் இன்னோவா, எர்டிகா, பொலேரோ, ஆம்புலன்ஸ், இன்டர்செப்டர் வாகனங்கள் காவல்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர், சபாநாயகர் கலந்து கொண்டனர்.