News July 8, 2025
புதுவை அரசுப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை

புதுவை முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசுப் பள்ளியில், ஆங்கில மொழி திறனை வலுப்படுத்த இனியா ஸ்ரீ என்ற பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த பேசும் பொம்மையில் ராஸ்பெர்ரி பை 3 போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோ போன் & இணைய வசதி பயன்படுத்தப்பட்டு, 5000 ஆங்கில வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
புதுச்சேரி: வங்கியில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

புதுச்சேரியில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 19 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 24, 2025
750 ஏக்கர் நிலம் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சர்வதேச வணிக உச்சி மாநாட்டு நேற்று தொடங்கியது. இவ்விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சேதராப்பட்டு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் 750 ஏக்கர் நிலத்தை 2 மாதத்தில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யபட உள்ளதால், தொழில் தொடங்க வருவோர் புதுச்சேரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
News August 24, 2025
புதுவை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

புதுவையில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 04132251691 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.