News December 29, 2025
புதுவையில் 4 பேரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி

முத்தியால்பேட்யைச் சேர்ந்த ஒருவரின், மொபைல் போனிற்கு மர்ம நபர் ஒருவர் ஆர்.டி.ஓ இ-செல்லான் லிங்கை அனுப்பி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.66,089-ஐ மோசடி செய்துள்ளனர். இதேபோல் ஏரிப் பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.59,000; ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.1000; மூலக்குளம் பெண் ஒருவரிடம் ரூ.34,952 மோசடியில் இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை

புதுச்சேரிக்கு, இன்று வருகை தந்துள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களை, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். இதில் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இந்திய குடியரசு துணைத் தலைவரை வரவேற்றனர்.
News December 29, 2025
புதுச்சேரி: துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், துணை ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 29, 2025
புதுவை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!


