News April 3, 2024
புதுவையில் 3 பேரிடம் ரூ1.61 லட்சம் மோசடி

புதுவையை சேர்ந்த தேவி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடியுள்ளார். அப்போது டெலிகிராம் மூலம் மர்ம நபர்கள் லிங்க் அனுப்பி அவரிடமிருந்து ரூ.1,39,000 -த்தை ஏமாற்றியுள்ளனர். மேலும், இதே போன்று கார்த்திக் என்பவரிடம் ரூ.14,000, சந்திரசேகர் என்பவரிடம் ரூ.8,000 ஏமாற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
சொர்ணவாரி பட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.பொதுச் சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
எம்.டி.எஸ்., படிக்க அழைப்பு-APPLY NOW!

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பில் சேர இந்தாண்டு நடைபெற்ற எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் www.centacpuducherry.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 8, 2025
புதுவையில் ஜிப்மர் இயங்காது

மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.